Skip to main content

காதலர் தின கவிதைகள் - Valentines Day Quotes in Tamil for Each day - Antony Kavithaigal

 காதலர் தின கவிதைகள்  - Valentines Day Quotes in Tamil for Each day - Antony Kavithaigal

உங்களுடைய காதலிக்கு இத சொல்லுங்க .. தினமும் ஒரு கவிதை உங்கள் காதல் வளர...

Rose Day - Feb 7



இன்று வைக்கிறேன் என் முதல் படி 
உன் மீது நான் கொண்ட காதலுக்காக

உன் மென்மையான மனதுக்கு இதழ் 
கொண்ட சிவப்பு ரோஜா இன்று என் முதல் பரிசு

யாருக்கும் அடிபணியாத இந்த மனது 
இன்று உன் அன்புக்கு ஏங்குகிறது

மஞ்சள் நிறமாக பூவாக இருக்கும் நம் நட்பை 
இன்று சிகப்பு ரோஜா ஏற்றுக்கொண்டு 
நம் காதல் உறுதி செய் என் அன்பே...

Propose day - Feb 8


சிகப்பு ரோஜா ஏற்றுக் கொண்டாய் 
என் அன்பை முழுமையாக பெற...

அடையாத கடனாக உன் வாழ்நாள்களின் 
மொத்த நாள்களும் எனக்கு ஒதுக்கு...


சிற்பிக்குள் இருக்கும் முத்தாக 
எனக்குள் நீ இருப்பாய் பாதுகாப்பாக...

பனியில் இருக்கும் நீராய் ஒன்றாக கலப்போம் 
காற்றோடு பயணித்து...



என் கையை நீட்டுகிறேன் உன் கைகோர்த்து 
சேர்த்து நடக்க வா என் அன்பே வாழ்நாள் முழுவதும்...

Chocolate day - Feb 9


கசந்த நாள்களும் ஓடிய தருணங்களும் என்றும் 
மாறாமல் மனதை வருடுகிறது...

உன்னை நான் பார்க்க மனம் ஏங்குகிறது
முடிவில்லாத நினைவு அலைகளுடன்..

உன் பிரிவு தாங்காமல் மனம் பித்து பிடித்து தவிக்கிறது

தவிக்கும் மனதின் தனிமை அகல 
உன்னோடு உடன் இருப்பேன் நான் 

கசப்பான வாழ்வில் இனிப்பை திணிக்கவா என்னோடு 
இல்லறம் நடத்த வா...அன்பே...
இனிப்பை இரட்டிப்பு ஆக்க....

Teddy day - Feb 10


காதல் செய்வதால் சில தூரங்களில் நான்..
என்னுடைய உடல் இல்லாமல் உணர்வை கொடுக்கும் 
ஒரு டெட்டி பியர் உன்னோடு...

சில நேரங்களில் என்மேல் உள்ள கோபங்களில் 
அடி வாங்குவது நான் கொடுத்த டெட்டி பியர்...

பொம்மை மீது பொறாமை கொள்கிறேன் 
அதை நீ கொஞ்சும் பொழுது..
கொஞ்சும் இடத்தில் நான் இல்லாமல் இருப்பதனால்....

நித்தம் ஒரு நொடி உன்னுடன் இருக்க 
மனம் ஏங்கி தவிக்குதடி

                              
இடம் மாற்றுவாயா ...
பொம்மை இருக்கும் இடத்தில் என்னை வைத்து 
உன்னுடன் நான் ஒன்றாக...



Promise Day- Feb 11


உடன் இருக்கும் நாட்களில் உன் முகம் வாடாமல் 
பிறர் அன்பை தேடாமல் நான் பார்ப்பேன்

நீ அழுதால் உன்னை அணைத்து அன்னையாக நான் இருப்பேன்...
ஆறுதல் சொல்லி உன்னை தேற்ற தந்தையாகவும் நான் இருப்பேன்

தோழனாக உனக்கு தோள் கொடுத்து 
நீ காண உலகத்தை உனக்கு நான் காட்டுவேன்...

எதிர்வரும் எந்த துன்பத்திலும் இருந்து
அனிச்சை செயலாக உன்னை நான் காப்பேன்

முடிவு என்பது என்றுமில்லை 
நான் உன்னோடு இருக்கும் நாட்களுக்கு

Hug day - Feb 12

மனதின் நினைவுகளை மொழிகளால் இல்லாமல் 
உணர்வாக கடத்தும் ஊடகமாக
ஒரு கட்டியணைப்பு உன்னோடு..

மனதின் பாரங்கள் இன்று பஞ்சாய் பறக்கிறது 
உன்னை கட்டி கொள்ளும் பொழுது..

நெருப்பாக இருக்கும் என்னை பனித்துளிகளால் நிரப்புகிறாய் 
உன்னோடு கட்டிக் கொள்ளும் பொழுது..
                               
குழந்தையாய் இருக்கும் பொழுது அம்மாவின் தழுவலை..
இன்று மனம் உன்னிடம் கேட்கிறது..



வாழ்க்கையில் உள்ள சோகங்களை நினைத்துப் பார்த்து வருந்தும் பொழுது... 
உன்னுடைய தழுவள்களே எனக்கு காயம் ஆற்றும் மருந்து...


In English - Valentines Day Quotes

Rose Day - Feb 7


Today I take my first step for my love for you

Magazine for your tender heart
A red rose is my first gift today

This unyielding mind yearns for your love today

Today the red rose accepts our friendship which is a yellow flower 
and confirm our love my love...

Propose day - Feb 8


You accepted the red rose
To fully receive my love...

Give me all the days of your life as an unearned debt...

A pearl within the sculpture
You will be safe inside me...

The water in the snow will mix together 
and travel with the wind...

I hold out my hand and walk hand in hand with you 
my love for the rest of my life...

Chocolate day - Feb 9


Bitter days and fleeting moments haunt the mind forever...

I long to see you
With endless waves of memories..

My mind is maddened and suffering from not being able to bear your division

I will be with you to overcome the loneliness of the suffering mind

Put sweetness in bitter life with me
Come home...dear...
Double the sweetness….

Teddy day - Feb 10


Some distance away because of love..
With you a teddy bear that gives me the feeling without my body...

Sometimes the teddy bear I gave to take a beating on my anger...

I am jealous of the toy when you caress it..
Since I am not in a beautiful place...

My heart longs to be with you forever

Change location...
Put me where the doll is and I'll be together with you...

Promise Day- Feb 11

On the days we are together, 
I will see your face not wither and not looking for other people's love

If you cry I will hug you and be a mother...
I will also be a comforting father to you

I will shoulder you as a friend and show you the world to see...

from any future suffering
I will protect you as a reflex

There's no end to the days I'm with you

Hug day - Feb 12

Memories of the mind
without languages
As a medium of transmission of consciousness
A bond with you..

The burdens of the mind are flying today 
 when I hug you..

You fill my fire with ice drops when I hug you..

Mother's embrace as a child..
Today the mind asks you..

When I think about the tragedies in life and feel sad... Your hugs are the medicine that heals my wounds...

Comments

Popular posts from this blog

Sentiment appa kavithaigal- Tamil Kavithaigal With Images - Antony Kavithaigal

Sentiment Appa kavithaigal  - Tamil Kavithaigal - Antony Kavithaigal Sentiment appa kavithaigal-  Tamil Kavithaigal  With Images பிறந்த பின் என்னை சுமந்தார்.... என் ஆசை கேட்டு அவர் ஆசை துறந்தார்... வரும் வாழ்க்கை இதுதான் என்ற  சிறந்த வழிகாட்டி என் தந்தை..... நான் தடுமாறும் நேரத்தில் என்னை  தாங்கினார்.... இன்று உங்கள் தடுமாற்றத்தில் நான் உடன் இருப்பேன் என் தந்தையே ...

11 தன்னம்பிக்கை கவிதைகள் - Best Tamil Motivational Quotes with Images - Antony Kavithaigal

11  தன்னம்பிக்கை கவிதைகள் -  Best Tamil Motivational Quotes - Antony Kavithaigal என்னுடைய முதல் 11 தன்னம்பிக்கை கவிதைகள் உங்களுக்காக... உங்களுக்கு இந்த கவிதை புடிச்சு இருந்தால், மற்றவர்களுக்கு அனுப்புங்கள்... 1. பயணம்... முன்னால் இருக்கும் பாதை யாருக்கும் தெரியாது.... அப்படிதான் வாழ்க்கையும்.... துணிந்து செல்... பாதை உண்டு என்ற நம்பிக்கையில்... 2. பயணம் வாழ்க்கை சொல்லி தருவது... போய் கொண்டே இரு... உன்னால் முடியும்வரை அல்ல... உன் பயணம் முடியும்வரை... 3.  நீர் நீரை போல் இருக்க கற்றுக்கொள் அனைவரின் தேவையாக.. நீயும் தேவை... உன்னை நம்பி இருப்பவர்களுக்கு... முன்னேறி செல்.... காலம் உனக்கு கை கொடுக்கும் ... 4.   வெள்ளை பிடித்த நிறம் அனைவருக்கும். .. கறை படும் பொழுது அல்ல... நிறம் மாறாமல் இருப்போம்... 5.  காலை பொழுது நிலை மாறும் உலகில்..... அடுத்த நொடி வாழ்வோய் என்ற நம்பிக்கை கொடுக்கும்.. முதல் அலாரம் காலை விடியல்... 6. உண்மை உண்மையாய் இரு.. உனக்காக காத்திருப்பார்களுக்கு... உண்மை கொல்லும் ஒரு நினைவை பொய்கள்.... உலகிற்கு உன்னை அறிமுகப்படுத்த உண்மை மட்டும் போதும்... நல்ல உறக்கம் வர என்றும் தேவ